சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சி தலைவர் விமலா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சின்னராஜ் பங்கேற்றார்.
கூட்டத்தில் அரவிந்த நகருக்கு கழிப்பிட வசதியும், சாக்கடையும், ஆசிரியர் காலனிக்கு குடிநீர் வசதியும் செய்து கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டன.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சிக்காரம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம், கண்ணார்பாளையம் துவக்கப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்கியம், சாமிநாதன், வார்டு உறுப்பினர்கள் முன்னாள் துணைத்தலைவர் ஜெகநாதன் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரவு செலவு கணக்கு படித்தவுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, சாலை, தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். ஊராட்சி செயலர் நேசராணி நன்றி கூறினார்.