• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கோவை குற்றாலத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்

    காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சாடிவயல் முதல் அடுத்த கோவை குற்றாலத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். முன்னதாக காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வனத் துறை வாகனங்கள் மூலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் கொண்டுவந்த பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அருவியில் குளிக்கும் இடத்தில் பாதுகாப்பில் இருந்த வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை ஒழுங்குபடுத்தினர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில் காணும் பொங்கலையொட்டி குடும்பத்துடன் அருவிக்கு வந்ததாகவும் வனத்துறையினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் எந்த ஒரு இடையூறும் இன்றி அருவிக்கு செல்ல முடிந்ததாக தெரிவித்தனர்.
    A call-to-action text Contact us