மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 103வது
பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் அவரது
திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு பல்வேறு
நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சூலூர் அடுத்த பாப்பம்பட்டி
ஊராட்சியில் அதிமுகவினர் சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமி அவர்கள் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினர். அதனைத்தொடர்ந்து கட்சி கொடி ஏற்றினர்.
எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை
செலுத்தினர். இவ்விழாவில் கழக செயலாளர்கள் ஸ்ரீதர், பரமசிவம் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றிய சேர்மன் ரத்தினம்கனகராஜ்,
பாப்பம்பட்டி ஊராட்சி துணைத்தலைவர்
தாரணிஸ்ரீதர் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.