தமிழக முதல்வரிடம் சிறந்த காவல் நிலையத்திற்க்கான விருதுபெற்ற சி-2
பந்தய சாலை காவல் ஆய்வாளர் உட்பட காவல் நிலைய குழுவினருக்கு கோவை
மாநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சி -2 பந்தய
சாலை காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல் நிலையத்திற்க்கான தகுதியில் முதல்
பரிசை வென்றதற்காக மாநகர காவல் ஆணையர் சி-2 பந்தய
சாலை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
கோவை மாநகர காவல் துறையில் மத்திய சரகத்தில் பி4 காவல்
நிலையமாக இயங்கிவந்த பந்தய சாலை காவல் நிலையம் 2015ஆம்
ஆண்டு முதல் சி-2 பந்தய சாலை காவல் நிலையமாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த
காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகிய பிரிவு நிலையங்கள் இயங்கி வருகிறது.
இந்தநிலையில், மாநில அளவில் 2018ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையத்திற்க்கான தகுதிப் போட்டியில் மாநகர
காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு
வசதிகளுடன் அக்காவல் நிலையம் நவீனமயமாக்கபட்டது. இதைத்தொடர்ந்து
பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டது. அதேபோல இந்த காவல்நிலையத்தில் நிர்வாகம், ஆவணங்கள்,
வழக்கின் புலன் விசாரணை ,நீதிமன்ற வழக்கு கோப்புகள் ஆகியவவை முறையாக
செயல்படுத்தப்பட்டது. இப்படியிருக்க தமிழக முதலமைச்சர் அவர்களால் மாநில காவல்
துறையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக பந்தய சாலை காவல்
நிலையம் தேர்வு செய்யப்பட்டு நேற்று குடியரசு தினத்தன்று பாராட்டுக்களும்
விருதுகளும் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை
ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு, உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன் ஆகியோர் பந்தய சாலை காவல்
நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்ற ஆளினர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கௌரவப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையாளர் சுமித் சரண்
கூறும்போது:-
பந்தயசாலை காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமையளிக்கிறது. இதற்கு முன்னதாக நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற விருதினை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றது. தற்போது, கிடைத்த விருது காவல் நிலைய அதிகாரிகளின் கடும் உழைப்பு, நல்லொழுக்க முதலானவற்றால் கிடைத்துள்ளது.இந்த விருதை வழங்கிய முதலமைச்சர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மிக்க நன்றி. சுமார் 24 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதரீதியான அமைதியை நிலைநிறுத்துவது, வழக்குகள் தேக்காமல் விரைவாக முடிப்பது, போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் வழக்குகளை கையாள்வது, காவல் நிலைய காவலர்களின் ஒழுக்கம் ஆகியவை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட இந்த விருதுக்கான தேர்வு 2 மாதங்கள் சென்னையிலிருந்து வந்த சிறப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோவையில் அடுத்தடுத்து ஸ்மார்ட் காவல் நிலையங்கள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.