பாரதம் - வார்த்தை வரையறைகளுக்கு
எல்லாம் அப்பாற்பட்டது, மரபிற்கெல்லாம் தொன்மையானது.
தன்னுடைய பல்லாயிரம் கால இருப்பில் சாத்தியங்களின் உச்சத்தையும் தாளா
துயரங்களையும் அது பார்த்திருக்கிறது. கடந்த 70 ஆண்டுகால சுதந்திரத்தில், முதல் பல ஆண்டுகள் பிரிவின் வலியிலும், ஒரு தேசமாய் பிழைப்பு நடத்துவதற்கான போராட்டத்திலும்
கடந்து போயின. கடந்த 20, 25 ஆண்டுகளில்
நாம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறோம்.
சாத்தியங்கள் நிரம்பக்கொண்ட ஒரு மகத்தான தேசம் இது.
ஆனால், சாத்தியங்களுக்கும்
நிஜத்திற்கும் ஒரு தொலைவு இருக்கிறது. இந்த தொலைவினை கடப்பதற்கு தேவையான துணிவும்
உறுதியும் நம்மிடம் இருக்கிறதா?
அனைவரையும் இணைத்துக்கொள்ள கூடிய ஒரு விழிப்புணர்வான பொருளாதாரத்தை அடையக்கூடிய விளிம்பில் இந்தியா நிற்கிறது. இந்தச் சமயத்தில், வெளியிலிருந்து ஏற்பட்ட தாக்கத்தால் அல்லாமல், நம் தேசத்திற்கு எது சிறப்பாய் வேலை செய்யும் என்பதையும், நம் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு, அதன் பண்பினை விழிப்புணர்வுடன் நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
உள்நிலையிலும் சரி
புறச்சூழ்நிலையிலும் சரி, வெற்றிக்கான அர்த்தத்தை மாற்றி
அமைக்கக்கூடிய அம்சங்களை வழங்கக்கூடிய திறன் இந்த கலாச்சாரத்திற்கு இருக்கிறது.
முதல்முறையாக, மனிதனுக்கு இருக்கும் ஒவ்வொரு
பிரச்சனைக்கும் தீர்வு அளிப்பதற்கு தேவையான திறமை, வளம், தொழில்நுட்பம்
எல்லாம் இந்த தலைமுறையிடம் இருக்கிறது. இல்லாதது என்னவோ அனைவரையும் இணைத்துக்
கொள்கிற அந்த விழிப்புணர்வு-நிலைதான். நாம் பாரதம் எனச் சொல்வதற்கு அடிப்படையே
இந்தத் தன்மைதான்.
இந்த ஆழந்த பாரம்பரியத்துடைய
முழு மகிமையை நாம் சுவைப்பதற்கான நேரம் இது. சாத்தியங்கள் நிரம்பக்கொண்ட ஒரு
மகத்தான தேசம் இது. ஆனால், சாத்தியங்களுக்கும்
நிஜத்திற்கும் ஒரு தொலைவு இருக்கிறது. இந்த தொலைவினை கடப்பதற்கு தேவையான துணிவும்
உறுதியும் நம்மிடம் இருக்கிறதா? நம்முன் இருக்கும்
கேள்வி இது.
இந்த தலைமுறை மக்களாகிய நாம், நம் தேசத்தை உயர்ந்த தேசமாய் மாற்றக்கூடியை துணிவும்
உறுதியும் நம்மிடம் இருக்கிறது என்பதை காண்பித்து, இதனை உயர்ந்த தேசமாய் மாற்றியமைக்க வேண்டும். இதனை நாம்
நிகழச்செய்வோம்.