• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    *டிராஃபிக் போலீஸுக்கு ஃபேன், பயோ டாய்லெட்டுடன்கூடிய நிழற்குடை!* - அசத்தும் தனியார் நிறுவனம்.

    இந்தியாவிலேயே முதன்முறையாகப் பயோ டாய்லெட், ஃபேன், லைட் உள்ளிட்ட வசதிகளோடுகூடிய போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டிருக்கிறது.
    *கோவை, அவினாசி சாலையில் உள்ள சி.எம்.சி சிக்னலில்* புதிதாக, போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது. 4 லட்சம் மதிப்பீட்டில் 12 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அந்த நிழற்குடையில் கழிவறை வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஃபேன், லைட் உள்ளிட்ட வசதிகளும் அதில் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்று இந்தியாவிலேயே எங்கும் கிடையாது என்று சிலாகிக்கின்றனர் போலீஸார்.
    இந்த நிழற்குடையை அவினாசி சாலையில் உள்ள 'பார்க்' நிறுவனம் தங்களது செலவில் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் முரளியிடம் பேசினோம், ``வெயில், மழை பாராது சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் டிராஃபிக் போலீஸாரின் பணி மிகவும் கடுமையானது. அதைச் செய்து பார்த்தால்தான் அதில் உள்ள சவால்கள் நமக்குத் தெரியும்.
    அவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டுமென்றால் அருகே உள்ள ஏதாவது அலுவலகங்களை நாட வேண்டியிருக்கிறது. பெண் காவலர்களுக்கு இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கான முன்மாதிரியாகவே நாங்கள் இதைச் செய்துள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதே போன்று கோவையின் முக்கிய சிக்னல்களில் கோவை மாநகரப் போக்குவரத்து போலீஸாரின் உதவியோடு இந்தப் பயோ டாய்லெட்டை எங்கள் நிறுவனம் சார்பாக நிறுவலாம் என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.
    கோயம்புத்தூர் மக்களே ..
    வீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருட்களுக்கும் மாற்றா வேற பொருள் தேடிக்கிட்டு இருக்கிங்களா ??
    அப்போ வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கோவை மாநகராட்சி கலையரங்கம் வந்துடுங்க..
    " மஞ்சப்பை"
    - மாற்றம் நம்மிலிருந்து துவங்கட்டும்..
    எல்லா விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் மாற்றுப் பொருள் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. வாங்கி பயன்படுத்துங்க..
    சுத்தமான, சுகாதாரமான கோயம்புத்தூர நாளைக்கு நமது குழந்தைகள் கைகளில் கொடுப்போம் ..
    அனுமதி இலவசம் அவசியம் வந்துடுங்க..






    டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் 
                   How to prevent and treat Dengue







    மழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும்பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்குஇன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய். இந்தியாவில் குறிப்பாகதமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி,நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு!

    ஒரு பக்கம்சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்திவருகிறது. இருந்தும்டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறதே தவிரகுறைந்தபாடில்லை.
    டெங்கு” பற்றிய பயமும் உயிரிழப்பும் முழுவதுமாகக் குறைவதற்கு அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். சுகாதாரமற்றச் சூழல்தான் டெங்கு பரவுவதற்கான அடிப்படை என்பதையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும். டெங்கு ஒழிப்புக்கான அரசின் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்புத் தர வேண்டும். அப்போதுதான் டெங்குவிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
    டெங்குக் காய்ச்சல் (Dengue Fever)
    டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால்இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போதுஎலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.
    இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர்வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில்மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.
    எப்படிப் பரவும்?
    கொசுவால் மட்டுமே பரவுகிறது. ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போதுடெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.
    எப்படிப் பரவாது?
    இது தண்ணீர்காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல்தும்மல் போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை.
    ஏடிஸ் கொசு ( Aedes Aegypti)
    ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர்பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால்மனித ரத்தத்தை உறிஞ்சும். இதனால் கொசுவின் வயிற்றில் முட்டைகள் வளர்ச்சியடையும். மூன்றாவது நாளில்நீரில் முட்டையிடும். ஆறாவது நாளில் லார்வா என்ற நிலையை அடையும். 11-வது நாளில் லார்வாவில் இருந்து பூச்சிநிலையை அடையும். 13-வது நாளில் முழுவையான கொசுவாக வளர்ச்சியடையும். இப்படி முதிர்ச்சியடையும் கொசுவாழும் சூழலுக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும்.
    பொதுவாககொசுக்கள் என்றாலே சாக்கடைஅசுத்தமான குளம்குட்டை போன்ற நீர்நிலைகள்நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும் என்று அறிந்திருப்போம். ஆனால்டெங்குக் கொசுக்களோ அசுத்தமற்ற நீர்நிலைகளிலும் வளரக்கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்ஆனால்,இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.
    யாருக்கு ஆபத்து அதிகம்?
    குழந்தைகள்பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாககுழந்தைகளுக்கும்,நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.
    அறிகுறிகள்
    திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்)அதிகமான தலைவலிகண்களுக்குப் பின்புறம் வலிகண் விழி சிவந்துவெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல்உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடுஎலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.
    உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு எப்போது?
    பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets)அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது,அது நுரையீரல்வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறுசிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.
    என்னென்ன பரிசோதனைகள்?
    ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால்உடனே டெங்குவை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால்உடனே மருத்துவமனைக்கு சென்று,என்.எஸ் ஆன்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்குக் காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவேஅதே நாளில் ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.
    என்ன சிகிச்சை?
    டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் (Paracetomol) மாத்திரையும்உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
    நோயுற்ற காலத்தில்
    காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால்,அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால்பழச்சாறுஇளநீர்கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
    தடுக்க என்ன வழி?

    டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாகவீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால்சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றும் வரை காத்திராமல்நீங்களே தண்ணீரை அகற்றுங்கள். குடிப்பதற்காக குடம்தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
    வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கொசு விரட்டிகொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசம்சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு,உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவேகைகால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்’’
    11-ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஆயுர்வேத புத்தகத்திலும் இது பற்றி சொல்லப்படவில்லை. அதன் பிறகு `தண்டக ஜுரம்’ என்ற ஒன்றைச் சொல்கிறார்கள். இந்த ஜுரத்துக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகளும் டெங்குவுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும்ஆயுர்வேதம் பரவக்கூடியதுபரவாதது என இரண்டு வகை ஜுரங்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் டெங்குவிஷக் கிருமிகளால் பரவக்கூடிய நோய்களின் கீழ் வருகிறது
    சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துகளில்,நிலவேம்பு கஷாயம்ஆடாதோடா இலை குடிநீர்பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனைப் பிரிவில் வாங்கிப் பயன்படுத்தலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்துடெங்கு வைரஸை அழிக்கும்.
    அதேபோலஆயுர்வேதத்தில் காய்ச்சல் அல்லது ஒரு நோய் வந்த பிறகு ஒரு மாத்திரையே எடுத்துக்கொள்வது சிகிச்சையாக கருதப்படுவதில்லை. அந்த நோய்க்கான காரணியை அறிந்து அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதும் நம்மை காத்துக்கொள்வதுமே சிறந்த வழி என்கிறது ஆயுர்வேதம். இதை, `நிதான பரிவர்த்தனமேவ சிகிச்சாஎன்கிறார்கள். நிதானம் என்றால் நோய்க்காரணியை நிதானித்து அறிவது. பரிவர்த்தனம் என்றால் எப்படி நோய் பரவுகிறது என்பதற்கான காரணங்களைக் கண்டறிதல். எனவேடெங்கு பரவக் காரணமாகும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதுதான் சிறந்த வழி.
    வேறு சில வழிமுறைகள்
    `வாசா குடுஜியாதி கஷாயம்’ – ரத்தத் தட்டுகளை அதிகரிக்கும். காய்ச்சலை குறைக்கும். உலகத்திலே ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் சிறந்த மருந்து ஆடாதொடா. இதுதான் இந்த கஷாயத்தின் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
    `சுதர்சன சூரணம்’ – இந்த மருந்தின் முக்கிய மூலப்பொருள் நிலவேம்பு. இதுமாத்திரை வடிவிலும் கிடைக்கும். நாட்டு மருத்துக்கடைகளில் கிடைக்கும். இதை சளிஇருமல் தொடங்கி எந்தக் காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம்.
    வீட்டிலேயே நிலவேம்பு கஷாயம் தயாரிக்கும் முறை.
    வீட்டிலேயே நிலவேம்பு கஷாயம் தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி நிலவேம்புடன்சிறிதளவு கோதைக் கிழங்கு,பர்ப்பாடகம்வெட்டிவேர்விளாமிச்சை வேர்சந்தனம்பேய்ப்புடல்மிளகுசுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அதற்கு எட்டு டம்ளர் தண்ணீரை ஊற்றிபாதியாகும் வரை கொதிக்கவைத்துக் குடிக்கலாம். இதில் பெரியவர்கள் 30 மி.லி-யும் (ஒரு அவுன்ஸ்)சிறுவர்கள் 10-15 மி.லி-யும்குழந்தைகள் 10 மி.லி-யும் கொடுக்கலாம். இதில் உள்ள அனைத்தும் நாட்டு மருத்துக் கடைகளிலேயே கிடைக்கும்.


    கொங்கு மண்டலத்தின் தொழில் மேதை திரு எஸ்.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள்

    கோவை மாவட்டத்தில் உள்ள தென்சங்கம்பாளையம் கிராமத்தில் 1940-ல் பிறந்தார் டாக்டர் எஸ்.வி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் எஸ்.வி.பாலசுப்பிரமணியம். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். இவரது தந்தையார் வேதநாயக கவுண்டர். தாயார் சீரங்கம்மாள். வேதநாயக கவுண்டருக்கு முதல் குழந்தை பெண் குழந்தை. இரண்டாவதாகப் பிறந்தவர்தான் இந்த எஸ்.வி.பி. இவருக்கு அடுத்து நான்கு சகோதரர்கள் பிறந்தனர்.

    உடுமலைப்பேட்டையில் பள்ளிப் படிப்பை முடித்த எஸ்.வி.பி. கோவை அரசு கல்லூரியில் பி.காம் படித்தார். அந்த படிப்பை முடித்த கையோடு சார்ட்டர்டு அக்கவுன்டன்ஸி படிப்பை படிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பதினேழு வயதிருக்கும்போது அவரது தந்தையார் வேதநாயக கவுண்டர் காலமானார்.
    சார்ட்டர்டு அக்கவுன்டன்ஸி முடித்த கையோடு பொள்ளாச்சி மகாலிங்கத்துக்குச் சொந்தமான சக்தி சுகர்ஸ் நிறுவனத்தில் 1966-ல் இன்டர்னல் ஆடிட்டராக வேலைக்குச் சேர்ந்தார் எஸ்.வி.பி. தனது நுணுக்கமான பிஸினஸ் அணுகுமுறையால் படிப்படியாக முன்னேறி, 1974-ல் சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் உதவித் தலைவர் பதவியை அடைந்தார். என்றாலும், தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற உந்துதல் எஸ்.வி.பி.யிடம் இருந்துகொண்டே இருந்தது. கொங்கு மண்டலத்து பிஸினஸ் குடும்பத்தில் பிறந்த இவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பது இயற்கையான விஷயம்தானே!

    1986-ல் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் எஸ்.வி.பி. ஈரோட்டுக்கு அருகே சத்தியமங்கலத்தில் முதல் சர்க்கரைத் தொழிற்சாலையைத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 1,250 டன் கரும்பை அரைக்கும் திறன் கொண்ட இந்த ஆலை. 2003-ல் இது 4,000 டன்னாக மாறியதோடு, 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தது.

    இரண்டாவது தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. 1992-ல் செயல்படத் தொடங்கிய இந்த தொழிற்சாலை ஆரம்பத்தில் 5,000 டன் கரும்பை அரைக்கும் திறன் கொண்டதாக இருந்தது. இன்றைக்கு அது 7,500 டன் கரும்பை அரைக்கும் திறன் கொண்டதாக மாறியிருக்கிறது.

    மூன்றாவதாக, கர்நாடக மாநிலம், கொள்ளேகால் தாலுகாவில் குந்தூரில் நாளன்றுக்கு 2,500 டன் கரும்பு அரவை செய்யும் மாதேஸ்வரா சுகர்ஸ் லிமிடெட் நிறுவனம் வாங்கப்பட்டு, 2007-ம் ஆண்டு இந்த நிறுவனத்துடன் மூன்றாவது யூனிட்டாக இணைக்கப்பட்டது.

    நான்காவது யூனிட் திருவண்ணாமலை மாவட்டம், கொழுந்தம்பட்டு கிராமத்தில் 2010-ல் தொடங்கப்பட்டது. நாளன்றுக்கு 5,000 டன் கரும்பு அரவை செய்வதோடு, 28.8 மெகாவாட் மின்சாரமும் இங்கு தயாரிக்கப்படுகிறது.

    சர்க்கரை உற்பத்தியில் இன்று தமிழகத்திலேயே புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கும் பண்ணாரி அம்மன் சுகர்ஸ், இந்த தொழிலோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆட்டோமொபைல், ஏற்றுமதி, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, கிரானைட், மருத்துவமனை, மின் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, போக்குவரத்து, கல்வி என பல துறைகளில் கிளை பரப்பி செழித்து வளர்ந்திருக்கிறது.

    பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கும் அதேநேரத்தில், மக்களின் நல்வாழ்வுக்கும் பல வகையிலும் சேவை செய்து வருகிறார் எஸ்.வி.பி. பண்ணாரி ரூரல் ஃபவுண்டேஷன் என்கிற பெயரில் இவர் நடத்திவரும் அமைப்பு, கிராம மக்களுக்கு கல்விச் சேவை செய்வதோடு, உடல்நலம் குறித்த விழிப்பு உணர்வையும் தந்து வருகிறது. சிறுதுளி அமைப்பின் மூலம் கோவையைச் சுற்றி நீராதாரத்தைப் பெருக்குவதிலும் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனம் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. விவசாயத் துறையில் இவரது சேவையைப் பாராட்டி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2005-ல் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இவருக்கு டாக்டர் பட்டம் தந்து கௌரவித்தது.

    கடும் உழைப்பும், வியாபார நுணுக்கமும் கொண்டவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள் என்பதற்கு எஸ்.வி.பி. ஒரு வாழும் உதாரணம்.
    A call-to-action text Contact us