• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    *"கோவையில் வரலாறு படைத்த பன்முகக் கலைவிழா"*

    தமிழையும் , தமிழ்க் கலையையும் மற்றும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் விதமாக
    தமிழ்க் கலைஞர்கள் சங்கமம் மற்றும் சாம்ஸ் அறக்கட்டளை இணைந்து பெருமையுடன் வழங்கிய ஐம்பெரும் விழா கோவை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளி சி.ஆர்.ஐ கலையரங்கில் 17-06-2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.
    தமிழ்க் கலைஞர்கள் சங்கமத்தின் நிறுவனர் தமிழ் மணிகண்டன்  வரவேற்புரையாற்றினார்.
    சிரவை ஆதினம் தவத்திரு. *குமரகுருபர அடிகளார்* தலைமையுரையாற்றினார்.
    இளையபட்டம் தவத்திரு. *மருதாசல அடிகள்* ஆசியுரை வழங்கினார்.
    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒரே மேடையில் அப்துல்கலாம் அவர்களின் பெயரன் *ஷேக் சலீம்* அவர்கள், பாரதியாரின் வம்சாவழிப் பெயரன் *ஹரிஹரன்* அவர்கள், பாரதிதாசன் அவர்களின் கொள்ளுப்பெயரன் *சுப்புரத்தினபாரதி அவர்கள்* மற்றும் கர்நாடக இசைக்கலைஞர் *கிரிஜா ஹரிஹரன்* அவர்களும், புகழ்பெற்ற மருத்துவர் *சொக்கலிங்கம்* அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    விழாவில் *இலக்கியச் சக்கரவர்த்தி இளந்தேவன்* அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    தொடர்ந்து சாம்ஸ் அறக்கட்டளையின் சாதனை செயல்பாடுகள் *குறுந்தகடாக வெளியிடப்பட்டது.*
    தமிழ்ப் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் *பரதநாட்டியம், சிலம்பம், கரகம், களரி, பறை* போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொலைக்காட்சிப் பேச்சாளர்கள் பங்குபெற்ற *விழிப்புணர்வுப் பட்டிமண்டபம்* மற்றும் *கருத்தரங்கம்* நடைபெற்றது.
    முக்கியமாக 17 துறைசார்ந்த *அறிஞர்களுக்கு விருது* வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
    விழாவில் *புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர்*. துரைசாமி அவர்களும் *கோவா தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்.* பழனிசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
    இவ்விழாவினை தமிழ்க் கலைஞர்கள் சங்கமத்தின் நிறுவனர் தமிழ் மணிகண்டன் ஒருங்கிணைத்தார்.
    விழாவில் ஈரோடு மக்கள் ஜி. ராஜன், சிபி ஐஏஎஸ் அகாதமி நிறுவனர் அரங்ககோபால்,  தொல்காப்பியர் பேரவைத் தலைவர் காளியப்பன், திருச்சி ஹரிசெல்வன் மற்றும் கோவை சுஜித்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
    சாம்ஸ் அறக்கட்டளை நிறுவனர் *ஹேமலதா* அவர்கள்  நன்றி கூறினார்.
    விழாவில் 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் இவ்விழா கோவையின் வரலாற்றில் மிக முக்கியதொரு இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    A call-to-action text Contact us