கோவை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி!
கோவை
சிகரம் பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 15-08-2018
புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு பாப்பம்பட்டி மக்கள் நூலகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து சிகரம் பவுண்டேஷன் நிறுவனர் விஸ்வபாரதி கூறியிருப்பதாவது, பள்ளி மாணவ
மாணவியர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய நாட்டின் 72 ஆவது
சுதந்திர தினத்தை முன்னிட்டும் சிகரம் பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 15-08-2018 புதன்கிழமை மதியம் 2.00
மணிக்கு
பாப்பம்பட்டி மக்கள் நூலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் 2 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான
மாணவ மாணவியர்கள் பங்கு கொள்ளலாம். மாணவ மாணவியர்களுக்கு நுழைவு கட்டணம் ரூபாய் 100. பொது (20வயது
-60வயது) நுழைவு கட்டணம் ரூபாய் 200. ஒரு பள்ளியில் இருந்து எத்தனை மாணவ மாணவியர்கள்
வேண்டுமானாலும் பங்கேற்கலாம். செஸ் போட்டிகள் 9 வயது,
14 வயது, 19
வயது, பொது (20வயது
-60வயது) என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஓவ்வொரு
பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள்
வழங்கப்படும். செஸ் போர்டு
வைத்திருக்கும் மாணவ மாணவியர்கள் போட்டிக்கு செஸ் போர்டை கொண்டு வரவும்.
போட்டியில் பங்கு பெரும் மாணவ மாணவியர்கள் தங்கள் பெயர்
மற்றும் நுழைவு கட்டணத்தை 15-08-2018 ஆம் தேதி காலை 11 மணிக்குள்
சிகரம் பவுண்டேஷன்
அலுவலகத்தில் அல்லது மக்கள் நூலகத்தில் அளிக்க
வேண்டும். மேலும் விபரங்களுக்கு சிகரம் பவுண்டேஷன்
அலுவலகம், 1/32-B, சிகரம்
மையம், பாப்பம்பட்டி,கோவை -641016. என்ற முகவரியில் நேரிலோ 9894544778 என்ற எண்ணிலோ தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.