• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES


    தினமும் 5 நிமிடம் தோப்புக்கரணம் போட்டால் கிடைக்கும் நன்மைகள்!


    எதற்காக தோப்புக்கரணம்?
    கோவிலுக்குப்போகும் பக்தர்கள் எல்லாம் திருக்கோவிலில், முதலில் உள்ள விநாயகர் சன்னதிமுன் தோப்புக்கரணம் போட்டுத்தலையில் குட்டிக்கொள்வர், அதன்பின்னே, மற்ற தெய்வச்சந்நதிகளுக்குச் செல்வர், பள்ளிகளில், வீட்டுப்பாடம் எழுதிவராத மாணவர்களை, ஆசிரியர்கள், தோப்புக்கரணம் செய்யச்சொல்வர்.
    பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் சிலரும், கோவிலில் இறைவன் முன் செய்கின்றனர், அவர்களின் பிள்ளைகளும் பள்ளியில் செய்கின்றனர், ஏன்? பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக்கரணம் போடச்சொல்கிறார்.
    பெற்றோர் ஏன் கோவிலில் தோப்புக்கரணம் போடுகின்றனர்?, ஒருவேளை, அவர்கள் எல்லாம் வாழ்க்கைப்பாடத்தை ஒழுங்காகச் செய்யாததனால், கோவிலில் தோப்புக்கரணம் போட, சாமி சொல்லியிருப்பாரோ!?
    அப்படியில்லையாம், கோவில்களில் தோப்புக்கரணம் போடச்சொன்னது, நம் முன்னோர்களாம்!.
    ஆம்! அவர்கள் வழிவழியாக, இதுபோன்ற நிறைய விசயங்களை, நமக்கு வாழ்க்கை நியதிகளாக வகுத்துச்சென்றிருக்கின்றனர்.
    கோவில்களில் போடப்படும் தோப்புக்கரணம் என்பது நம் முன்னோரின் உடல் அறிவியல். ஆமாம், இன்னும் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ விசயங்களை, கோவில்களில் நாம் செய்யும் நடைமுறைகளாக மாற்றி வைத்திருக்கின்றனர், நம் மூதாதையர்.
    தோப்புக்கரணம், என்ற ஒற்றைப்பயிற்சியே, அனைத்துவகை உடற்பயிற்சிகளுக்கும், முன்னோடியாக விளங்குகிறது.மேலும், உடற்பயிற்சி செய்யாவிடினும், அல்லது தெரியாவிட்டாலும், நீங்கள் தினமும், தோப்புக்கரணம் போட்டுவந்தால் போதும்.
    பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடங்கள் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத மாணவர்களை எப்படி தோப்புக்கரணம் போடச்சொல்கிறார்கள் என்று தெரியுமா?
    இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொண்டு, வலது கையை மடக்கி, வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக்கொண்டு, இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் நேராக, உட்காரும் நிலையில், இந்த தோப்புக்கரணம் போட வேண்டும், எத்தனை முறை?
    அது ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்தது, ஆனாலும், அவர் சொல்லும்வரை நிறுத்தக்கூடாது. பொதுவாக எல்லோரும், படிக்காத மாணவர்களுக்கு இது ஒரு தண்டனையே, என நினைப்பார்கள், அது தவறு, மாறாக, அந்த மாணவர்களே, பின்னர் வகுப்பில் முதல் மாணவர்களாக வரவேண்டும், அதற்காகவே, ஆசிரியர்கள் நல்ல எண்ணத்தில், அதை செய்யச்சொன்னார்கள்.
    நன்மைகள் :
    இந்தச் செய்முறைகளால், மாணவர்கள் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்னத் தெரியுமா? மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.
    நினைவு அதிகரிக்கும் :
    தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது, விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கி, அவர்கள் பாடங்களில் சிறப்பான விகிதத்தில் தேர்ச்சி ஆகின்றனர்.
    மேலும், செயல்திறன் மிக்க மூளையின் ஆற்றல் மூலம், மாணவர்களின் தேவையற்ற எண்ணங்கள் நீங்கி, அவர்களின் இலட்சியக்குறிக்கோளில் இலக்கை அடைய, தினசரி அவர்கள் செய்யும் தோப்புக்கரணம் உதவிசெய்கிறது. இதற்காகத்தான் ஆசிரியர்கள், மந்தமான மாணவர்களை, அறிவாற்றல்மிக்க மாணவர்களாக ஆக்கவே, தோப்புக்கரணம் செய்யச் சொன்னார்கள் என்று அறிய முடிகிறதல்லவா?
    மேலும், ஆசிரியர்கள், ஆர்வமில்லாத மாணவர்களை, சமயத்தில் காதுகளைப் பிடித்துத் திருகுவார்கள். அதுவும், இதே பலன்களுக்காகத்தான் செய்தார்கள். இப்போது சொல்லுங்கள், தோப்புக்கரணம் ஒரு திறவுகோல்தானே, மனிதனின் மந்தநிலையை நீக்கி, அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தர, முன்னோர் விட்டுச்சென்ற வரம்.
    புதிய ஆற்றல் :
    தோப்புக்கரணம் பெரியவர்களுக்கு என்ன நன்மைகள் செய்யும் என்றால், தினமும் அதிகபட்சம் ஐந்து நிமிட நேரம் தோப்புக்கரணம் செய்துவந்தால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகச் சென்று, உடலின் ஆற்றல்நிலை தூண்டப்பட்டு, ஞாபகசக்தி அதிகரிக்கும், உடலில் புத்துணர்ச்சியும், செயல்களில் ஊக்கமும் உண்டாகும். மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு விலகும், மேலும், உடல் கை கால் தசைகள் எல்லாம் இறுகி, உடல் வலுவாக விளங்கி, ஆரோக்யமாக வாழலாம்.
    What is Super brain yoga?

    நினைவாற்றல் சக்தி எல்லோருக்கும் அவசியம், நினைவாற்றல் குறைந்த மாணவர்கள் படிப்பில் கோட்டை விடுகின்றனர், நடுத்தர வயதினரும், நினைவாற்றல் குறைபாடு காரணமாகவே, தினசரி வாழ்வில் பல இன்னல்களை, சந்திக்க நேரிடுகிறது. இதைப்போக்க என்ன செய்யவேண்டும்?
    ஒன்றும் செய்ய வேண்டாம், இனி மறக்க மாட்டேன் பிள்ளையாரப்பா, என்று தினமும் தோப்புக்கரணம் போட்டுவர, சீக்கிரம் பிரச்னை தீரும், இல்லை, நான் கோவில்களில் எல்லாம் போய் தோப்புக்கரணம் போடமாட்டேன் என்று சொன்னால், சரி வீட்டில் மனைவியின் முன் இனி நீ சொன்னதையெல்லாம், ஆபிஸ் முடிந்து வரும் வழியில் வாங்கிவர மறக்கமாட்டேன் என்று தோப்புக்கரணம் போடுங்கள்.
    முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற தோப்புக்கரணம்:
    நம் மூதாதையர் கண்டுபிடித்த அரிய உடற்பயிற்சிக்கலை, இந்த தோப்புக்கரணம், ஆயினும் இன்று நிலை என்ன, நாம் பள்ளிகளில் அவற்றை மறந்துவிட்டோம், எந்த ஆசிரியரும் இதை செய்யச்சொல்வதில்லை, அவருக்குத் தெரிந்தால்தானே, அவர் சொல்லிக் கொடுப்பார். கோவில்களில் இப்போது நாம் தோப்புக்கரணம் இடுவோரைக் காண்பது மிக அரிதாகிவிட்டது, எல்லோரும் இப்போது வேகமான உலகின் விளம்பரத் தூதர்களாக மாறி, கோவிலில் விநாயகர் சன்னதி முன், கால்களை சற்றே வளைத்துக் கொண்டு, கைகளை மடக்கி, தலையின் முன்புறம் குட்டிக்கொண்டு நகர்ந்து விடுகின்றனர், பாஸ்ட் பார்வார்ட் தோப்புக்கரணம்!
    நம் முன்னோர் சொன்னபோது, அலட்சியப்படுத்திய நாம், இன்று வெள்ளைக்காரன் சூப்பர் பிரெயின் யோகாஎன்று நம்மிடமே கொண்டுவந்து, இந்த யோகா, உங்கள் மூளையின் இரு பக்கங்களையும் செயல்பட வைக்கும், உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும், பெண்களின் பிரசவம் எளிதாகும், அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்களை எல்லாம் சரிசெய்யலாம், என்று விளம்பரம் செய்து, பொருளீட்டுகிறான்.
    யோகாவை வளர்ப்போம் :
    யார் வீட்டு சொத்தை, யாரிடம் வந்து விற்கிறான், பாருங்கள்! இதைவிடக்கொடுமை, நாமும் வரிசையில் நின்று, அவர்களிடம் நேரம் வாங்கிக்கொண்டு, பயிற்சியை செய்துவந்து பெருமை பேசுகிறோம்.
    சூப்பர் பிரெயின் யோகாவில் எங்க பிள்ளையை சேர்த்தபிறகுதான், அவன் சூப்பரா படிச்சு, நல்ல மார்க் வாங்கிட்டு, இப்போ மெடிக்கல் படிக்கிறான், என்று. நம்முடைய வருங்காலத் தலைமுறைகள் நோய்நொடி இல்லாமல் நல்லா வாழணும்னு, நம்ம பெரியவங்க, நல்ல மனசோட செஞ்சதை, இந்த நவீனத்திருடர்கள், நம் பாட்டன் சொத்தை, நமக்கே கூச்சமில்லாமல் விற்கிறார்கள்.
    நாமும் அந்நிய மோகத்தில், அதை உபசரித்து வரவேற்கிறோம், இன்றைய தலைமுறைகளின் வாழ்வும் சிந்தனையும், மிகமிக வேறுபட்ட பாதைகளில், நம்முடைய பாரம்பரிய பெருமையை மறந்து, செயற்கை உபதேசங்களின் பின் சென்று கொண்டிருக்கிறது.
    பகுத்தறிந்து, ஒரு விஷயத்தை ஆராய்ந்து, அறியும் ஆற்றல் நிலை, இப்போது எங்கும் காணமுடியவில்லை. பாரம்பரியக் கலைகள் அறிந்து, வாழ்வில் அவற்றைக் கடைபிடித்து, நம்மவர்க்கும் பகிர்ந்து நலமுடன் வாழ்வோம்! எதிர்கால தலைமுறையைக் காப்போம்!!
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இளைஞர்களை கனவு காண சொல்லி
    இந்தியாவையும் உற்சாகப்படுத்தி
    இரு துருவ முனைகளிலும்
    இந்திய பெருமையை எடுத்துரைத்து
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
    பாரினில் நம் பெருமையை எடுத்துரைத்து
    இரு வரி தமிழ் திருக்குறள்களை
    இளைஞர் இதயத்தில் விதைத்து
    குழந்தையோடு குழந்தையாய் நீ மாறி
    குதூகலத்தோடு நீயும் உரையாடி
    கேள்விக்கனை தொடுக்கச் செய்து
    குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி
    பிறந்த ஒருநாள் மட்டும் நீ அழுது
    உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
    தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து
    எம்மை விட்டுப் பிரிந்த எம் கலாமே !
    வருந்துகிறது !
    நீங்கள் இல்லா இந்தியா !!!



    கோவை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி!


    கோவை  சிகரம் பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 15-08-2018 புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு பாப்பம்பட்டி மக்கள் நூலகத்தில் நடைபெற உள்ளது.
    இது குறித்து சிகரம் பவுண்டேஷன் நிறுவனர் விஸ்வபாரதி கூறியிருப்பதாவது, பள்ளி மாணவ மாணவியர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சிகரம் பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற      15-08-2018  புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு பாப்பம்பட்டி மக்கள் நூலகத்தில் நடைபெற உள்ளது.
    இதில் 2 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்கள் பங்கு கொள்ளலாம். மாணவ மாணவியர்களுக்கு நுழைவு கட்டணம் ரூபாய் 100. பொது (20வயது -60வயது) நுழைவு கட்டணம் ரூபாய் 200. ஒரு பள்ளியில் இருந்து எத்தனை மாணவ மாணவியர்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். செஸ் போட்டிகள் 9 வயது, 14 வயது, 19 வயது, பொது (20வயது -60வயது) என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஓவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். செஸ் போர்டு வைத்திருக்கும் மாணவ மாணவியர்கள் போட்டிக்கு செஸ் போர்டை கொண்டு வரவும்.
    போட்டியில் பங்கு பெரும் மாணவ மாணவியர்கள் தங்கள் பெயர் மற்றும் நுழைவு கட்டணத்தை 15-08-2018 ஆம் தேதி காலை 11 மணிக்குள் சிகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் அல்லது மக்கள் நூலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு சிகரம் பவுண்டேஷன் அலுவலகம், 1/32-B, சிகரம் மையம், பாப்பம்பட்டி,கோவை -641016. என்ற முகவரியில் நேரிலோ  9894544778 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




    400 பள்ளிகளில் கழிப்பறையை புதுப்பித்து தருகிறார் சூர்யா!!

    தமிழகம் முழுவதும் 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை களை புதுப்பிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார்.
    டிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று உற்சாக மாக கொண்டாடினர். பல இடங் களில் நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. பிறந்தநாளை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை சூர்யா சந்தித்தார். அப்போது அவர், ‘‘புதுப் புது அனுபவங்களை நிறைய கற்றுக்கொண்டே இருங் கள். செய்யும் வேலையில் நாம்தான் பெஸ்ட்டா இருக் கணும்னு மனசுல ஆழமா நினைங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்’’ என்றார்.
    அதேபோல, கல்வி சேவை யிலும் தனித்த ஈடுபாடு காட்டி வரும் சூர்யா, ‘‘பள்ளி மாணவர் களுக்கு படிப்புக்கு இணையாக, சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை யும் புரியவைக்க வேண்டும்’’ என்று பல நிகழ்ச்சிகளில் கூறிவந்தார்.
    இந்நிலையில், அந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தற் போது மாவட்டத்துக்கு குறைந்தபட் சம் 10 பள்ளிகள் என தமிழகம் முழு வதும் 400 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ள கழிப்பறை களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார். விரைவில் இப்பணி கள் தொடங்க உள்ளன.
    இதை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிப் பறைகளை புதுப்பிப்பது மட்டுமின்றி, தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன

    இந்த 26 வார்த்தைகள்!
    எவ்வளவு அழகு

    *A - Appreciation*
    மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

    *B - Behaviour*
    புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

    *C - Compromise*
    அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

    *D - Depression*
    மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

    *E - Ego*
    மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

    *F - Forgive*
    கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

    *G - Genuineness*
    எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

    *H - Honesty*
    தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

    *I - Inferiority Complex*
    எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

    *J - Jealousy*
    பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

    *K - Kindness*
    இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

    *L - Loose Talk*
    சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

    *M - Misunderstanding*
    மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

    *N - Neutral*
    எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

    *O - Over Expectation*
    அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

    *P - Patience*
    சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

    *Q - Quietness*
    தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

    *R - Roughness*
    பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

    *S - Stubbornness*
    சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

    *T - Twisting*
    இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

    *U - Underestimate*
    மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

    *V - Voluntary*
    அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

    *W - Wound*
    எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

    *X - Xerox*
    நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

    *Y - Yield*
    முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

    *Z - Zero*
    இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்......படித்ததில் பிடித்தது.....

    A call-to-action text Contact us