.............................................
''விவசாயின் வியர்வை நீர்..''
.............................................
ஒரு முறை ஐந்து பேர் புத்தரிடம் வந்து,
அய்யா..,
நாங்கள் உலக சமயங்கள்(மதங்கள்) அனைத்தையும்,
அதன் தலைவர்களையும் சந்தித்தில் எங்களுக்கு எந்த சமயமும் பிடிக்கவில்லை.இறுதியாகத் தங்களைக் காண்டு தங்கள் சங்கத்தில் சேர வந்துள்ளோம் என்றனர்.
அதற்கு புத்தர்,
நான் ஒரு கேள்வி கேட்பேன்,அதற்கு சரியான பதில் கூறுபவர்களை மட்டும் எங்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு,
புத்தர் அந்த ஐவரையும் பார்த்து ,
உலகத்தில் பல்வகை நீர் உள்ளன,
அந்த நீரில் எந்த நீர் போற்றப்படுகிறது..? என்று கேட்டார்..அதற்கு ஐவரும் இந்த விதமான நீதியை பதிலாக சொன்னார்கள்.
அவை..
1.இமயமலையில் இருந்து கங்கை கொண்டு வரும்
நீர் என்றார் ஒருவர்.
புத்தர் இல்லை என்றார்.
2.நீண்ட காலம் பிரிந்து சேர்ந்த மகனைக் கண்ட
தாயின் கண்ணீர் என்றார் இரண்டாமவர்.
அதற்கு இல்லை என்றார் புத்தர்..
3.மூன்றாமவர் அதிகாலையில் தளிர் நடமாடும் புல்,பூண்டு,செடி,கொடி,பூ மரத்தின் மீது படிந்து
இருக்கும் இளம் பனித்துளி நீர் என்றார்.
அதற்கும் புத்தர் இல்லை என்றே சொன்னார்.
4.மக்களுக்கு வாழ்வளிக்கும் மாமழை
வானிலிருந்து பெய்கின்றதே அந்தப் புனிதநீர் என்றார் நான்காமவர்.
அதற்கும் புத்தரின் குரல் இல்லை என்பதே.
அங்கு குழுமி இருந்தவர்கள் ஐந்தாமவர் என்ன
சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர்..
5.ஐந்தாமவர் எழுந்து கூறினார்..
”உலகத்தில் மனிதனுக்கும்,உயர் இனங்களுக்கும்
தொழிலில் உழைத்து,விவசாயத்தில் காலையில் வெள்ளி எழு முன் எழுந்துமாலை பொழுது போகும் வரை உழைக்கின்றானே,
அந்த உழைப்பாளியின் உடலில் சிந்தும் உன்னத வியர்வை நீர்தான் ஐயனே,நீர் என்றான்.
உடனே புத்தர் உழைப்பிற்குத் தான் அன்பு செலுத்த வேண்டும் என்றார்.அந்த நீருக்குத்தான் சக்தி அதிகம் உண்டு.என்று கூறி ஐந்தாம் நபரை தன் சீடர்களில் ஒருவராக ஏற்று
சங்கத்தில் சேர்த்து அவருக்கு தீட்சையும் வழங்கினார்..
ஆம்.,நண்பர்களே..,
மண்ணில் புதையல் இருந்திருந்தால் உலகமே மண்வெட்டி பிடித்து இருக்கும்..
புதையல் இல்லை என்று தெரிந்தும் நம் வயிற்றை நிரப்புகிறவர்கள்தான் விவசாயி..