• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கற்றுக்கொள்ள வேண்டிய

    பாடங்கள் ..!

    சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
    கொக்கிடம் இருந்து இரண்டையும்,
    கழுதையிடம் இருந்து மூன்றையும்,
    கோழியிடம் இருந்து நான்கையும்,
    காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
    நாயிடம் இருந்து ஆறையும்
       நாம் கற்று கொள்ள வேண்டும்.

    1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,
    நன்கு ஆலோசனை செய்த பின்பு
        முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

    2 - கொக்கு ஓடு மீன் ஓட,
     உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம்,
     தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

    3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
    வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,
    தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும்
     கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

    4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,
    தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல்
     ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

    5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,
    தேவையான பொருள்களை
      சேமித்து வைத்தல்,
     யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
     தைரியம், எச்சரிக்கை உணர்வு
      ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

    6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,
    உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,
    நன்றாக பசி இருந்தும் கட்டளை
     வரும் வரை காத்து இருத்தல்,
      நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,
    தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

    யார் ஒருவர் மேலே சொன்ன
      இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

    சாணக்கியர்..!!!
    மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
    01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
    02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
    03. கோபப்படக்கூடாது.
    04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
    05. பலர் முன் திட்டக்கூடாது.
    06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
    07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
    08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
    09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
    10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
    11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
    12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
    13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
    14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
    15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
    16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
    17. ஒளிவு மறைவு கூடாது.
    18. மனைவியை நம்ப வேண்டும்.
    19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
    20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
    21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
    22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
    23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
    24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
    25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
    26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
    27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
    28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
    29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
    30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
    31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
    32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
    33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
    34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
    35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
    36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
    37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
    என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...
    அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

    பண்டிதர் சிரித்தபடியே,
    "அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
    வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...
    வேலையை ஆரம்பித்தார்...
    'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
    பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...
    பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...
    "ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... 
    உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"
    இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
    "நல்ல சந்தேகங்க சாமி... 
    நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. 
    முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
    எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"
    இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
    அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
    "இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''
    இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
    "சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...
    இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம். 
    கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
    "எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
    ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."
    இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
    அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...
    இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.
    கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
    இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
    "சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" 
    பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...
    கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
    "மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."
    பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...
    அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...
    நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.
    அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
    "சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"
    இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
    'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
    "இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".
    நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...
    "சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...
    நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...
    முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...
    அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...
    கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...
    *"நம்முடைய அறிவும்...*
    *புத்தியும்...*
    *திறமையும்...*
    *அதிகாரமும்...*
    *அந்தஸ்தும்...*
    *பொருளும்...*
    *மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*
    இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...
    *தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*
    *இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*
    *அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*
    *நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*
    ஆகவே, 
    *இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*
    *மதிப்போம்...*
    *வாழ்வளிப்போம்...*
    நாம் அனைவரும் நலமாக வாழ..
    எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.*

    *"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.*
    *எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.*
    *எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*
    *எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.*
    *நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.*
    *பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

    திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
    இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.
    மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
    ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.

    அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும்.
    ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.
    ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது!
    எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.
    அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது.
    ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார்.
    அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார்.
    உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!' என்றார்.
    உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார்.
    அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி
    மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி
    நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '
    ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
    கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'
    அடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார்.
    இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது அன்பு அளவுகடந்திருந்தது...
    டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார்.
    அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…
    அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள்
    வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள்.
    அதற்குள் ஒரு பெட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதிக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது.
    முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது.
    அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.
    மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”
    ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது.
    ‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
    ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது.
    அதே வரிகளுடன்…
    ‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
    ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது.
    ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர்தியோடரிடமிருந்து...
    Mrs. Sumathi
    ‘I have seen many more people in my life. are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
    Dr. Theodore
    அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார்.
    அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர்.
    அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".
    திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
    ஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''
    உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்!
    இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்!

    மிசின தூக்கிபோடு பானைய கையில் எடு..! ஆரோக்கிய குடிநீர்



    “நீரின்றி அமையாது உலகு”
    பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம்
    நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது.
    இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது

    .இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது .
    இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி சொய்யலாம்..!
    மிளகு 25 கிராம்
    சீரகம் 25 கிராம்
    தேத்தாங்கொட்டை 1
    வெட்டி வேர் சிறிது
    வெந்தையம் 20 கிராம்
    இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது .

    காலை 8 மணிக்கே எதிர் வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்துவிட்டது. 9 மணிக்கு மேல், வியர்வையில் குளித்துவிடுகிறது தேகம். உடம்பில் இருக்கும் தாது உப்புகள் எல்லாம் இப்படி வெளியேறின பிறகு, எங்கிருந்து குழந்தைகள் உற்சாகமாக ஓடி ஆடுவது? நாம் எனர்ஜியாக வேலை பார்ப்பது? இதோ, அதற்கான வழியைச் சொல்கிறார், இயற்கை மருத்துவர் யோ.தீபா. இவர் சொல்லும் ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளை தினம் ஒன்றாகத் தயாரித்து குழந்தைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் குடியுங்கள். எனர்ஜியாக வேலையைத் தொடருங்கள்.


    குட்டீஸ்களுக்கு...
    1. அரைத் துண்டு ஆப்பிள், அரைத் துண்டு பீட்ரூட், ஒரு கேரட் மூன்றையும் தேவையான வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்து, வடிகட்டுங்கள். ஏபிசி ஜூஸ் ரெடி. விருப்பப்பட்டால், ஓர் ஏலக்காய் சேர்த்து அரைக்கலாம். அனைத்துச் சத்துக்களும் நிறைந்த ஜூஸ் இது.
    2. ஒரு கேரட், ஓர் ஆரஞ்சு இரண்டையும் சுத்தமாக்கி, தேவையான வெல்லம் மற்றும் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டினால், டார்க் ஆரஞ்சு கலரில் பீட்டா கரோட்டின் நிறைந்த ஜூஸ் ரெடி.
    3. கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகளுடன் சிறு இஞ்சித் துண்டு மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து வடிகட்டிப் பருகலாம்.
    4. கிர்ணிப்பழத்தைக் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அரையுங்கள். இது, சம்மரில் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்னையைத் தடுக்கும்.
    5. ஒரு துண்டு கேரட், ஆரஞ்சு சுளைகள்  6, அரைத் துண்டு ஆப்பிள் மூன்றுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்பொடி சேர்த்து அரைத்து வடிகட்டவும். இந்த ஜூஸைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சம்மரில் வரும் தொற்றுநோய்கள் கிட்டே நெருங்காது.
    குறிப்பு: எல்லா ஜூஸ்களிலும் கட்டாயம் பானைத் தண்ணீரையே பயன்படுத்துங்கள். அப்போதுதான் தாது உப்புகள் கிடைக்கும். சர்க்கரைக்குப் பதில் வெல்லம் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைப்பதுடன், உணவுகளில் இருக்கும் கால்சியத்தை உடம்பு உறிஞ்சிக்கொள்ளவும் வெல்லம் உதவி செய்யும்.
    பெரியவர்களுக்கு...
    1. தோல் சீவிய மாம்பழத் துண்டுகளையும், பேரிக்காய்த் துண்டுகளையும் மிக்ஸியில் அரைத்து, அப்படியே ஸ்மூத்தியாக குடித்தால், வெயில் நேர சோர்வு நீங்கி ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள். வெயில் காலத்தில் அதிகமாகும் ரத்த அழுத்தம், இந்த ஸ்மூத்தியைக் குடித்தால் கன்ட்ரோலில் இருக்கும்.
    2. தோல் சீவிய அரைத் துண்டு ஆப்பிள், அரைத் துண்டு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு பெரிய துண்டு அன்னாச்சிப்பழம் நான்கையும் அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கவும். கால் வலி, கால் வீக்கம் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.
    3. வெயிலுக்கு பெஸ்ட் சாய்ஸ், மோர். பால் அலர்ஜி இருப்பவர்கள், தேங்காய்ப்பாலில் மோர் தயாரிக்கலாம். திக்கான ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலில்   அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, ஓர் இரவு முழுக்க அப்படியே வைத்தால் தயிராகிவிடும். இந்தத் தயிரை அப்படியே மோராக்கியும் குடிக்கலாம். அல்லது இஞ்சி, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதில், ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் மோர் கலந்து குடிக்கலாம். குடிக்கும்போது இந்துப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். ஜீரணத் தொல்லை, அசிடிட்டித் தொல்லை இரண்டையும் சரியாக்கும் இந்தத் தேங்காய்ப்பால் மோர்.
    4. அரை வெள்ளரிக்காய், ஒரு பேரிக்காய், நான்கு பசலைக்கீரை ஆகியவற்றை அரைத்து வடிகட்டினால், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த ஜூஸ் ரெடி. இதற்கு உப்பு, வெல்லம் இரண்டுமே தேவையில்லை.

    5. உடற்பருமனாக இருக்கும் பெண்கள், தலா ஒரு சிறு துண்டு வெள்ளைபூசணி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் மூன்றையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்.


    .............................................

    ''விவசாயின் வியர்வை நீர்..''
    .............................................

    ஒரு முறை ஐந்து பேர் புத்தரிடம் வந்து,

    அய்யா..,

    நாங்கள் உலக சமயங்கள்(மதங்கள்) அனைத்தையும்,
    அதன் தலைவர்களையும் சந்தித்தில் எங்களுக்கு எந்த சமயமும் பிடிக்கவில்லை.இறுதியாகத் தங்களைக் காண்டு தங்கள் சங்கத்தில் சேர வந்துள்ளோம் என்றனர்.

    அதற்கு புத்தர்,

    நான் ஒரு கேள்வி கேட்பேன்,அதற்கு சரியான பதில் கூறுபவர்களை மட்டும் எங்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு,

    புத்தர் அந்த ஐவரையும் பார்த்து ,

    உலகத்தில் பல்வகை நீர் உள்ளன,

    அந்த நீரில் எந்த நீர் போற்றப்படுகிறது..? என்று கேட்டார்..அதற்கு ஐவரும் இந்த விதமான நீதியை பதிலாக சொன்னார்கள்.

    அவை..

    1.இமயமலையில் இருந்து கங்கை கொண்டு வரும்
    நீர் என்றார் ஒருவர்.

    புத்தர் இல்லை என்றார்.

    2.நீண்ட காலம் பிரிந்து சேர்ந்த மகனைக் கண்ட
    தாயின் கண்ணீர் என்றார் இரண்டாமவர்.

    அதற்கு இல்லை என்றார் புத்தர்..

    3.மூன்றாமவர் அதிகாலையில் தளிர் நடமாடும் புல்,பூண்டு,செடி,கொடி,பூ மரத்தின் மீது படிந்து
    இருக்கும் இளம் பனித்துளி நீர் என்றார்.

    அதற்கும் புத்தர் இல்லை என்றே சொன்னார்.

    4.மக்களுக்கு வாழ்வளிக்கும் மாமழை
    வானிலிருந்து பெய்கின்றதே அந்தப் புனிதநீர் என்றார் நான்காமவர்.

    அதற்கும் புத்தரின் குரல் இல்லை என்பதே.

    அங்கு குழுமி இருந்தவர்கள் ஐந்தாமவர் என்ன
    சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர்..

    5.ஐந்தாமவர் எழுந்து கூறினார்..

    ”உலகத்தில் மனிதனுக்கும்,உயர் இனங்களுக்கும்
    தொழிலில் உழைத்து,விவசாயத்தில் காலையில் வெள்ளி எழு முன் எழுந்துமாலை பொழுது போகும் வரை உழைக்கின்றானே,

    அந்த உழைப்பாளியின் உடலில் சிந்தும் உன்னத வியர்வை நீர்தான் ஐயனே,நீர் என்றான்.

    உடனே புத்தர் உழைப்பிற்குத் தான் அன்பு செலுத்த வேண்டும் என்றார்.அந்த நீருக்குத்தான் சக்தி அதிகம் உண்டு.என்று கூறி ஐந்தாம் நபரை தன் சீடர்களில் ஒருவராக ஏற்று

    சங்கத்தில் சேர்த்து அவருக்கு தீட்சையும் வழங்கினார்..

    ஆம்.,நண்பர்களே..,

    மண்ணில் புதையல் இருந்திருந்தால் உலகமே மண்வெட்டி பிடித்து இருக்கும்..

    புதையல் இல்லை என்று தெரிந்தும் நம் வயிற்றை நிரப்புகிறவர்கள்தான் விவசாயி..


    SUCCESS IS THE COURAGE TO CONTINUE

    Before we can pursue success, we need to understand what success isn’t. Lots of people hold a very narrow definition of success. They think it’s about building wealth, having the perfect relationship, launching a billion-dollar business or amassing a large social media following. And a lot of times, they attach famous people to their image of success.
    None of these things or people is wrong, but being like them doesn’t necessarily make you successful. Many people have fought and struggled to the top only to feel miserable and burned out once they get there. They’re unhappy because they pursued the wrong definition of success—one that didn’t match their values.
    Throughout childhood and early adulthood, we learn various ideas of success from our parents, teachers and friends. Everyone has their own agenda and idea of who and what we should be. Although it’s OK to value the opinions and hopes of others, we shouldn’t necessarily adopt them as our own. No one can impose their version of success on us. No one can tell us what it means to live the good life.
    It’s easy to assume that success means obtaining a specific object, such as a job or social status, and to believe that if we get that thing, we’ll be successful. But some of the greatest successes resulted from the worst failures. Winston Churchill said, “Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts.”


    A call-to-action text Contact us