கோயம்புத்தூர்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் காய்கறி அறிவியல் துறை சார்பில், தளிர்கீரைகள் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து ஒரு நாள் திறன் பயிற்சி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
மனித உடல்நலத்திற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளை தளிர்கீரைகள் பெருமளவில் வழங்குகின்றன. இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஊட்டச்சத்து நிறைந்தவையாகவும், உடல் நலத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, தளிர்கீரைகள் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டல் தொடர்பான முழுமையான பயிற்சி தொழில் முனைவோருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் செயல்முறை சாகுபடி திறன்கள், தளிர்கீரைகளின் ஊட்டச்சத்து நன்மைகள், உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள், தரநிலை பராமரிப்பு, நீடித்த வருவாய் வாய்ப்புகள், மதிப்பு கூட்டல் முறைகள், வணிக தொடக்கத்திற்கான வழிகாட்டல் மற்றும் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளன.
ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பயிற்சி கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம்:
காய்கறி அறிவியல் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
இந்த பயிற்சி, தளிர்கீரை சாகுபடியை தொழிலாக மேற்கொள்ள விரும்புவோருக்கும், ஊட்டச்சத்து சார்ந்த புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என பயிற்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





