பாப்பம்பட்டியில் புதிய நூலகம் – முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைப்பு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பம்பட்டி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட நூலகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இவ்விழாவில் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.வி. மகாலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ப. மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ப. சிவகாமி, ஊராட்சி கழக செயலர் கதிரேசன், பாப்பம்பட்டி ஊராட்சி செயலர் குணகேரன், நூலகர்கள் ஜானகிராம் (பாப்பம்பட்டி) மற்றும் ராணி (சிங்காநல்லூர்), சிகரம் பவுண்டேசன் தலைவர் சிகரம் விஸ்வநாதன்,
உள்ளூர் பிரமுகர்கள் தர்மராஜ், வேணுகோபால், கோபி, ஆறுமுகம், சந்திரமோகன், மாரிமுத்து, பாலசுப்ரமணியன், கார்த்தி, பத்மாவதி, தங்கமணி, சூர்யா, ரங்கநாதன், மோகன், சின்னசாமி ஆகியோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவிற்கு உற்சாகம் சேர்த்தனர்.