• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    9,143 கோடி சொத்து.. இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் கோவை தொழிலதிபர்! யார் இந்த கே.பி. ராமசாமி?


     2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ்  பத்திரிக்கை. இந்த பணக்காரர்களின் தரவரிசை பட்டியலில் அம்பானி, அதானியுடன் சேர்த்து ஒரு புதிய பெயரும் இடம் பெற்றுள்ளது. 

    அந்தப் பெயருக்கு சொந்தக்காரர் நமது கோயமுத்தூர்காரர் என்பது உங்களுக்கு தெரியுமா?. யார் அவர், அவரின் பிண்ணனி என்ன?, எப்படி இந்தியாவின் 100 பணக்காரர்களில் ஒருவராக இடம் பிடித்தார்? என்பது குறித்த சுவாரசிய தகவல்களை இங்கு உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

     

    9,143 கோடி சொத்து.. இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் கோவை தொழிலதிபர்! யார் இந்த கே.பி. ராமசாமி?


    இந்தியாவின் பணக்காரர்கள் யார் என கூகுள் செய்தால், அம்பானி, அதானி பெயர்கள் வரும். ஆனால் தற்போது நமது தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது பெயரும் இந்த வருடத்திற்கான இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    ​ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியல்: 


    ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும், சிவ் நாடார் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

    AD


    புதிதாக இணைந்த ஒரு பெயர்:

    எப்பொழுதும் நாம் வழக்கமாக பார்க்கும் அம்பானி, அதானி பெயர்களுடன் சேர்த்து நமது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது பெயரும் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளது.

    ​கேபிஆர் மில்ஸ்:



    கோவையில் அமைந்துள்ள ராமசாமியின் கே பி ஆர் மில், சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி, பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல்களை உற்பத்தி செய்து வருகிறது.

    யார் இந்த கோயமுத்தூர்காரர்? 


    விவசாய குடும்பத்தில் பிறந்து 1984 இல் கே.பி.ஆர். மில்ஸ் என்ற பெயரில் தனது தொழிலை துவக்கியவர், ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் மற்றும் கேபிஆர் மில்ஸ் நிறுவனத் தலைவர் கே.பி. ராமசாமி.


    தனது தொழிலை படிப்படியாக விரிவுபடுத்தி 2013 ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி தொழிலில் காலடி எடுத்து வைத்து, 2019 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான இன்னர் வேர் பிராண்டான ஃபாசோவை (Faso) அறிமுகம் செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்.

    ​சாதனைகள்:

     ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி கேபிஆர் மில் ஆண்டுதோறும் 128 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது. விளையாட்டு உடைகள் முதல் நைட் சூட் வரை சர்வதேச பிராண்டுகளான மார்க் அண்ட் ஸ்பென்சர், வால்மார்ட், ஹெச்எம் போன்ற நிறுவனங்களுக்கு தங்களது ஆடைகளை சில்லரை விற்பனை செய்து வருகிறது.

    ​கேபி ஆர் இன்ஸ்டியூட் மற்றும் அறக்கட்டளை:

    இது மட்டுமல்லாமல் கே.பி ராமசாமி, கேபி ஆர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மூலம் கல்வியை வழங்க கேபிஆர் அறக்கட்டளை என்ற பொது அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.

    கோ-ஜென் கம் சுகர் பிளான்ட்:

    கேபி ராமசாமி தமிழ்நாட்டில் பல காற்றாலைகளை நிறுவியதாகவும், கர்நாடகாவில் பசுமை மின்சாரத்தை வழங்குவதற்காக கோ ஜென் கம் சர்க்கரை ஆலையை நிறுவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    ​நிறுவனத்தில் பணிபுரியும் 90% பேர் பெண்கள்:

    கோவை மட்டுமல்லாது ஈரோடு மாவட்டத்திலும் கே பி ஆர் மில்ஸ் துவங்கப்பட்டு சமீபத்தில் ஆண்டுக்கு 42 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. இவரின் நிறுவனத்தில் பணிபுரியும் 90% பேர் பெண்கள் என்பது ஹைலைட்டான விஷயம்.

    ​இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் கோவை தொழிலதிபர்: 


    இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் 2.3 பில்லியன் டாலர், அதாவது 9.143 கோடி சொத்து மதிப்புகளுடன் நூறாவது இடத்தை பிடித்துள்ளார் கே.பி. ராமசாமி.

     


     அக்டோபர் 5:

    இன்று வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள்

    ***************



    இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார்.


    ஆன்மீகவாதி என்று ஒரு வட்டத்திற்குள் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை அடக்கிவிட முடியாது.


    வள்ளலாருக்கு இலக்கியவாதி,  சொற்பொழிவாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சித்த மருத்துவர், ஜீவகாருண்யர், தீர்க்கதரிசி, ரசவாத வித்தகர் என்று இன்னபிற முகங்களும் உண்டு.


    அன்பையும், இரக்கத்தையும் வாழ்வின் அடிப்படையாக கருத வேண்டும்.  கோபம், சோம்பல், பொறாமை, பொய், கடுஞ்சொல் முதலானவற்றை அறவே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார்.


    பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலம் சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் எழுப்பி,  ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் நீங்கி சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடு பட்டார்.


    சாதி, மத,சாஸ்திரங்களால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் கண்டு கண்டித்து, இந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் பேசிய வள்ளலார், எல்லோரும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தனி இயக்கத்தையும் தனிக்கொடியையும் கொண்டு வந்தார்.


    "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..'’ என்று மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்காகவும் மனம் உருகினார்.  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்  என்பதை கொள்கையாக கொண்டவர்.


    பசியால் வாடுவோரின் பசி தீர்க்க அன்று அவர் மூட்டிய தீ இன்றும் அணையாஅடுப்பாக எரிந்துகொண்டிருக்கிறது வடலூரில்.


    அவரின் கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் பலரும் அன்னதானம் செய்து வருகிறார்கள்.


    தமிழ் வித்வான், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், நூல் ஆசிரியர், நூல் பதிப்பாளர் என்று பல பரிமாணங்களைக் காட்டியவர் வள்ளலார்.


    இவர் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் மறைந்தார்.


    சாதி, மதங்களையும் மூடப்பழக்கத்தையும் முதலீடாக வைத்து பிழைக்கும் சனாதனிகள் அவரை தீ வைத்து கொன்று விட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் என்று பிரச்சாரம் செய்து மக்களை நம்பவைத்து விட்டார்கள்.


    வாழ்க அவரது புகழ்!

    வளர்க அவர் பரப்பிய மனிதாபிமானம்.!

    A call-to-action text Contact us