என்.ஜி.பி கலை கல்லூரியில் விளையாட்டு விழா
டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவை டாக்டர் என்.ஜி.பி கல்வி குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி
பழனிசாமி துவக்கி வைத்தார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின்
முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன் இவ்விழாவில் முன்னிலை வகித்தார். டாக்டர்
என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன் இந்நிகழ்விற்கு
தலைமையேற்றார்.
கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு
நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மற்றும் பல்கலைக்கழக அளவில் பல்வேறு விளையாட்டுகளில்
பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கான ஓட்டப்
பந்தயம், கூடைப்பந்து, கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மேலும், பேராசிரியர்களுக்கான ஓட்டப்பந்தயம், நடைப்பந்தய
போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் கல்லூரியின் செயலர் பரிசுகளை வழங்கினார்.