• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

     தோல் நோய்களை குணப்படுத்தும் புங்கன்




    புங்கன்மரத்தின் பயன்கள்

    • சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியது
    • தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது,
    • மூட்டு வலியை போக்கவல்லது
    • உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியது
    • சோரியாஸிஸ்ஸை குணப்படுத்த கூடியது
    • பசியின்மை போக்க கூடியது
    • உடல் நோய்களை போக்கும் தன்மை கொண்டது

    புங்கன்மரத்தின் இலைகள் புறஊதாக் கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. 



    • வீட்டின் முன்பு இருக்கக் கூடியது புங்கன்மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. நல்ல சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக் கூடிய நச்சு கிருமிகளை தடுக்க கூடியது.

      • புங்கன் மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது.
      • புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
      • புங்கன் மரத்து விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
      • இதைப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.
      • புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்ககூடியது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது.
      • இது ஆஸ்துமா, நெஞ்சுக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்கன் காய்களை சேர்த்து பயன்படுத்தலாம்.
      • புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. புங்கன் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
      • புங்க இலையை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
      • புங்க இலைகளை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவலாம்.
      • நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சு சளி, இருமல் குறைகிறது.
      • தலையில் பொடுகு இருந்தால் இதை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.
      • புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது.
      • புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, உடல் வீக்கம் சரியாகும்.
      • இத்தகைய சிறப்புகளை தரும் புங்கன் மரத்தை அனைவரும் வீட்டில் வளர்த்து, அதன் பயனைப் பெறுவோம்.

     புகைப்படத்துறையில் மென்பொருட்கள் பயன்பாடு - செயல்முறை பயிற்சி பட்டறை



    SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினிஅறிவியல் துறை சார்பில் "Adobe Software and Photography " "புகைப்படத்துறையில் மென்பொருட்கள் பயன்பாடு - செயல்முறை பயிற்சி பட்டறை"எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் போ .சுப்பிரமணி அவர்கள் தலைமை வகித்தார். கணினிஅறிவியல்  துறைத் தலைவர் கே.தமிழ்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

    இம்பிகர் டெக்னாலஜி நிறுவன தொழில்நுட்ப புகைப்பட வல்லுநர் சியாம் மணிராஜ் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு புகைப்படங்களின் தொழில்நுட்ப அடிப்படைகள்நவீன புகைப்பட மென்பொருளை பயன்படுத்தும் முறைகள், புகைப்படத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து இப்பயிற்சி பட்டறையில் செயல்முறை விளக்கம் தரப்பட்டது.



    நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

     பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்...


    பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

    தீபாவளி பண்டிகை என்பது பட்டாசுகள் வாணவேடிக்கைகளுடன் குதுகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

    செய்ய வேண்டியவை

    *
    பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்க தொடங்க வேண்டும்.

    *
    பட்டாசுகளை பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்கள் மற்றும் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும்.

    *
    மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து ஒதுங்கி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.


    *
    எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது. அதே போல் பட்டாசுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே வெடிக்க வேண்டும்.

    *
    பட்டாசுகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை படித்து பின்பு அதன்படி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

    *
    ராக்கெட் போன்ற வானவேடிக்கை பட்டாசுகளை பற்றவைப்பதற்கு முன் திறந்த ஜன்னல், கதவுகள், பால்கனி போன்றவற்றை நோக்கி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிப்பது நல்லது. இதன் மூலம் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

    *
    நம்முடைய மொத்த பட்டாசுகளை வெடிக்கும் பொழுது கால்களில் காலணிகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

    *
    தண்ணீர் நிறைந்த வாளியை பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதில் அனைத்து விட முடியும்.

    *
    ஒரு நேரத்தில் ஒரு வெடியை மட்டுமே வெடிக்க வேண்டும். ஒருவர் பட்டாசை வெடிக்கும் பொழுது மற்றவர்கள் அதை பார்ப்பது (பாதுகாப்பான தூரத்திலிருந்து) பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    *
    நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதி, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீபாவளிக்கு முன் பட்டாசுகளை எவ்வாறு கையாள்வது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.



    செய்யக்கூடாதவை

    *
    பட்டாசுகளை வெடிக்கும் பொழுது ஜெர்ஸி, நைலான், சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தி துணிகளை அணிய வேண்டும்.

    *
    பட்டாசுகளை வெடிக்க தீக்குச்சிகள், சிறிய ஊதுபத்திகளை பயன்படுத்தக் கூடாது.

    *
    மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்கு கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    *
    இரண்டு, மூன்று வெடிகளை இணைத்து வெடிக்க கூடாது.

    *
    உபயோகப்படுத்தப்படாத பட்டாசுகளின் அருகில் எரியும் விளக்கு, ஊதுபத்தி போன்றவற்றை வைக்க கூடாது.

    *
    வெடிக்காமல் பாதியில் நின்று போன வெடிகளுக்கு அருகில் சென்று அவற்றை வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

    *
    தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடந்து செல்லும் பொழுதோ அல்லது வாகனங்களில் செல்லும் பொழுதோ வெடிகளை வெடிக்க கூடாது.

    *
    அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பது போன்ற வேடிக்கை விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

    *
    குழந்தைகளின் கைகளில் பட்டாசுகளை கொடுத்து ஏற்றக்கூடாது.

    *
    வீட்டிற்குள்ளே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

    *
    நாம் பற்றவைத்த பட்டாசுகளை வெடிக்கவில்லை என்றால் அவற்றை கைகளில் தூக்கிப் பார்ப்பது அல்லது கால்களால் தள்ளுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது.

    *
    அதே போல் சிறிய பாட்டில்கள் பாத்திரங்கள், பெட்டிகளின் உள்ளே வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    *
    வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது கிரீம், களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்க கூடாது.

    *
    தொளதொளப்பாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.


    *
    ஆஸ்துமா, அழற்சி மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் தீபாவளி சமயங்களில் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.

    *
    தீபாவளி பண்டிகை என்பது மிகவும் குதுகலமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இத்தீபாவளி திருநாளை பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது நம் கைகளில்தான் உள்ளது.

    அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுவதற்கு வாழ்த்துக்கள்.

     

    A call-to-action text Contact us