• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    உலகம் முழூவதும் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

    டிசம்பர் 14, 1990 -அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அக்டோபர் 1- சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1-ந் தேதி சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    அனுபவங்களின் அமுதசுரபியாக திகழ்பவர்கள் முதியவர்கள். வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி போன்ற வார்த்தைகளை சமுதாயத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம்.

     



    முதியவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றவர்கள். முக்கிய பிரச்சினைகளில் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் போது அது நன்மையை பயக்கும். அவர்கள் எப்போதும் சிறு குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். வாழ்வின் எதார்த்தத்தை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

    அவர்களை தனிமையில் விட்டுவிடாதீர்கள். அவர்களிடம் அக்கறையுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் வீட்டில் இருப்பதால் வெறுப்பாக கருதி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள்.  நாளை இதே போன்ற சூழல் உங்களுக்கும் ஏற்படலாம். முதியோர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

    வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள்முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு முறையை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியாத காலம் வரட்டும்

     

    A call-to-action text Contact us