• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கோவையின மக்கள் குறைகளை தீர்க்கும்  “மக்கள் சபை 

    கூட்டம்” அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் துவக்கம்


    முதல் நாளான இன்று 6 வார்டுகளுக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டறியும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகராட்சியில் 17 வார்டுகளில் மக்கள் சபை கூட்டங்களில் பங்கேற்கிறார்.

    கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் 37 பேரூராட்சி, 3 நகராட்சி உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் சபை கூட்டங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடத்தப்பட இருக்கின்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 21 ம் தேதி வரை இந்த மனுக்களை பெறும் நிகழ்வு நடைபெற இருக்கின்றது. மிக விரைவாக கோரிக்கை மீது நடவடிக்கைகள் எடுத்து அரசாணைகள் வழங்கப்படும்.

    கோவை மாநகராட்சியில் 15 லட்சத்து 38 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் 9 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகின்றது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கும் வகையில் சிறப்பு நிதி பெற்று மாநகராட்சி முழுவதும் திட்டம் செயல்படுத்தபடும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.



    உயர்மின் கோபுரம், விவசாய நிலங்களில் அமைப்பது தொடர்பாக ஓரே மாதிரியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கோவை விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான மனுக்கள் குறித்தும் முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.


     

     அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் : தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

    உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநில பொது செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர்.ராஜேஸ் கண்ணா கூறியதாவது:

    அதிகரித்து வரும் சர்க்கரை நோயின் தாக்கம், உயர் இரத்த அழுத்தம், மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள்,மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பக்கவாத்தின் அறிகுறிகள் தெரிந்த 4 1/2 மணி நேரத்திற்குள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கபட்டால் முழுமையாக குணப்படுத்தவோ அல்லது பாதிப்பின் தாக்கத்தை குறைக்கவோ முடியும். 

    பக்கவாததின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பக்கவாதத்தை குணப்படுத்துதில் பிசியோதெரபி மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க பொது மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பெரும்பாலும் கிராமப்புற மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு தனது வாழ்நாள் முழுவதும் உடல் ஊனத்துடனே வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். 

    இதேபோல் அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை அளிக்க ஆரம்ப மற்றும் வட்டார மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் பக்கவாதத்தின் தாக்கத்தை கிராமப்புற பகுதிகளில் வராமல் தடுக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த அரசு ஆரம்ப மற்றும் வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி மருத்துவர்கள் இதுவரை நியமிக்கபடவில்லை. இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படுத்தபடுக்கையாகி இறந்து விடுகிறார்கள். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளும் ஒரு சில பிசியோதெரபி மருத்துவர்களே உள்ளனர். இவர்களால் அனைத்து நோயாளிகளுக்கும் தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 

    இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் பக்கவாதத்தால் ஏற்படும் பெறப்பட்ட உடல் ஊனம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அவலநிலை உருவாகிவிடும். எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் உடனடியாக பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்கவும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் பயிற்சி பிசியோதெரபி மருத்துவர்களை ஊக்க ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும். 

    மக்களை தேடி மருத்துவம்

    ஏற்கனவே மக்களை ‌தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பிசியோதெரபி மருத்துவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பிற மாநிலங்களை போல உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் ஆரம்ப மற்றும் வட்டார மருத்துவமனைகளில் பக்கவாத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகள் செய்து தரவும் பொது மக்களிடம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை  "வரும் முன் காப்போம்" மற்றும் "மக்களை தேடி மருத்துவம்" ஆகிய திட்டங்கள் மூலம் ஏற்படுத்தவும் தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த "வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி பிரிவு தொடங்கப்படும்" என்ற அறிவிப்பை உடனே நிறைவேற்ற வேண்டும்.



    இதன் மூலம் தமிழகத்தில் பக்கவாதத்தின் தாக்கத்தை குறைக்கவும் குணப்படுத்தவும் முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    It is a Great platform to "UNLOCK YOUR KIDS TALENTS"

     TALENT FOUNDATION and MAGIZH ACADEMY

     Proudly Presents

     All India Level ONLINE DRAWING COMPETITION 2021

     CATEGORY A : Pre KG, L.K.G, U.K.G – Colouring

     CATEGORY B : I, II  -  Flowers

     CATEGORY C : III, IV, V  - Dream House

     CATEGORY D : VI,VII, VIII  - Natural Scenery  

     Reg Fee : Rs.150/- Art Work

     Payment Mode : Gpay / Phonepe / Paytm – 9003595595

     Last Submission : 5th November 2021

     The winning contestant will be notified via Whatsapp or Email and Social Media

     WhatsApp @ 9003595595 for Registration or More Details

     







     

    நொச்சி... ஆகச் சிறந்த ஒரு மூலிகை என்றால் அது மிகையல்ல. `கொசுவை விரட்டும் தன்மை படைத்ததுஎன்ற தகவலைக் கேள்விப்பட்டதில் இருந்து, பெரும்பாலான மக்களால் வீடுகளில் இது வளர்க்கப்பட்டுவருகிறது.



    இது ஒரு குறு மரமாக வளரும் தன்மைகொண்டது. இந்த மூலிகைச் செடியை ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் நெருங்காது. அதனால், இது வயல்வெளிகளின் ஓரமாகவும், வேலி ஓரங்களிலும் வளர்க்கப்படுகிறது.

    இந்தச்செடி சமவெளியில் 4 மீட்டர் உயரமும், மலைப் பகுதிகளில் 6 மீட்டர் உயரமும் வளரக்கூடியது. இந்த இலைக்கு பூச்சியைத் தடுக்கும் திறன் இருக்கிறது. அதனால், தானியங்களை சேமித்துவைக்கும் குதிர்களில் நொச்சி இலைகளையும் சேர்த்து மூடி வைத்தால் பாதிப்புகள் ஏற்படாது. இதன் மூலம் பழங்காலத்திலிருந்தே இந்த இலை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.



    நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி (வேது பிடித்தல்) பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும், இதன் இலையை பச்சையாகவோ, உலர்த்தியோ தலையணை உறைக்குள் வைத்து அதன் மேல் தலை வைத்து உறங்கினால், தலைவலி, ஜலதோஷம், சைனஸ் கோளாறுகள் சரியாகும்.

    காய்ச்சலின்போது நொச்சி இலையை வேகவைத்து அதன் நீராவியை வேது பிடிப்பதன் (ஆவி பிடித்தல்) மூலம் வியர்வை உண்டாகி, காய்ச்சலின் தீவிரம் மெள்ள மெள்ளத் தணியும். இதே நீரை உடல் வலியின்போது பொறுக்கும் சூட்டில் உடலில் ஊற்றிவர, நல்ல நிவாரணம் கிடைக்கும்.



    நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். மேலும், நொச்சி இலையை சுக்கு சேர்த்து அரைத்து, நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பற்றுப் போட்டு வந்தால், தலைவலி சரியாகும்.

    வலி, வீக்கம், கீல்வாயு ஏற்பட்டால் நொச்சி இலையை வெறுமனே வதக்கி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். அடிபட்ட வீக்கம் மட்டுமல்லாமல், உடம்பில் தலை முதல் கால் வரை எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இந்த ஒத்தடம் பலன் தரும். நொச்சி இலைச் சாறு அல்லது இலையுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் சிறிதளவு எடுத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சைனஸ், கழுத்தில் நெறிகட்டுதல், கழுத்துவலி போன்றவை சரியாகும்.

    நரம்புக் கோளாறுகளால் கழுத்துவலி வந்து அவதிப்படுவோருக்கும் இந்தச் சிகிச்சை பலனளிக்கும்.

    கொசுவை விரட்ட என்னென்னவோ மருந்துகள் வந்தும் அவை பலனளிப்பதில்லை. மேலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, இதை மாற்று நிவாரணியாகப் பயன்படுத்தலாம். காய்ந்த அல்லது பச்சையாக உள்ள நொச்சி இலைகளை தீயில் எரித்து, புகைமூட்டம் போட்டு வந்தால் கொசுக்கள் விலகும். படுக்கை அறையில் வெறுமனே நொச்சி இலைகளை வைத்தாலும் கொசுக்கள் நெருங்காது. நொச்சி, வேப்பிலை போன்றவற்றை புகை மூட்டம் போடுவதாலும் கொசுத் தொல்லைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    நொச்சி இலையை ஆடு, மாடுகள் உண்ணாது என்பதால், வீடுகளைச்சுற்றி வளர்க்கலாம். அதே நேரத்தில் கொஞ்சம் ஈரமான இடங்களில் செழித்து வளரும். நொச்சி எளிதில் வளராது என்று சிலர் சொல்கிறார்கள். தொடக்கத்தில் ஈரம் காயாதவாறு பார்த்துக்கொண்டால், மிக எளிதாக வளரக்கூடியது. நொச்சியின் வேர் முடிச்சுகளை எடுத்தும் நடலாம்.

    நொச்சி, பொடுதலை, நுணா இலை போன்றவற்றால் ஆன கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை நொச்சி இலைக்கு உள்ளது என்பதால், அது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    மாட்டுச் சாணத்துடன் நொச்சி இலைகளைச் சேர்த்து முதுகுவலிக்குப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைச் சாற்றைப் பூசினாலும் நிவாரணம் கிடைக்கும். ஆக, பல்வேறு வழிகளில் நல்லதொரு மருந்தாகிறது நொச்சி.

    மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாக வளர்க்கலாம். ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் கரைகளிலும் இவற்றை நட்டு வைக்கலாம். இதனால் கரைகளுக்கு வலு சேர்க்கும்; வெள்ளம் ஏற்படும்போது கரைகள் உடையாமல் காக்கும். நீர்ச் செழிப்புள்ள இடங்களில் வளரக்கூடிய நொச்சி காற்றைத் தடுக்கும் தன்மை படைத்தது. வீடுகளின் முகப்பில் நடுவதால் தூசியை வடிகட்டுவதோடு கொசுக்களை விரட்டும் தன்மையும் படைத்தது

     


    A call-to-action text Contact us