*பாரதி எங்கள் பாரதத்தாய்*
பாவினால் பாரதம் பதித்தாய்!!!
படைப்புக்களால் எதிரியைப் புடைத்தாய்!!!
சாத்திரம்தனை சூத்திரமாய் தந்தாய்!!!
கோத்திரங்களைக் களைந்தாய்!!!
மனத்தக மாசிலனாய் திகழ்ந்தாய்!!!
குணத்தக நல் நெறி பகர்ந்தாய்!!!
துஞ்சாதார் துயர் களைந்தாய்!!!
அஞ்சாதோர் நெஞ்சில் நிறைந்தாய்!!!
மொழித் தாய் என மொழிந்தாய்!!!
தாய்மொழி ஒன்றே என வியந்தாய்!!!
பாட்டுக்கு சூட்டு கொடுத்தாய்!!!
ஏட்டுக்கு நல் வழிகாட்டு கொடுத்தாய்!!!
சுதந்திரச் சிறகை விரித்தாய்!!!
அதை நிதம் நிதம்
எண்ணித் திளைத்தாய்!!!
சேறுக்குப் பயிராய் விளைந்தாய்!!!
நாறுக்கு பூவாய் மணந்தாய்!!!
காக்கையும் நான் என கரைந்தாய்!!!
உன் யாக்கையும்
இம்மண்ணுக்கே தந்துவந்தாய்!!!
தேசக் கிறுக்கனாய் திகழ்ந்தாய்!!!
பாசத்துக்கே சறுக்கி விழுந்தாய்!!!
பாருக்கே போர் வீரத்தாய்!!!
பாரதி எங்கள் பாரதத் தாய்!!!