ரஷ்யா ஆர்வம்...
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினைப் பற்றி தெரிந்து கொள்ள ரஷ்ய அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஆவலாக உள்ளனர்.
நம் தலைவர் பெயரை வைத்துள்ள ஸ்டாலின் யார்? என ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் தமிழக முதல்வரைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
டில்லியில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு ' தமிழகத்தில் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஸ்டாலின் யார்..
இவரைப் பற்றிய விபரங்களை விசாரித்து எங்களுக்கு தெரிவியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜோசப் ஸ்டாலின், ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், சர்வாதிகாரியாகவும் விளங்கினார். அவர் மறைந்த ஒரு சில நாட்களில் கலைஞருக்கு மகன் பிறந்தார். அவருக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார் கலைஞர்.
- Prof.K.Nagaraj