• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    கோவையில் உலகப்புகழ் ஜாதுகர் மங்கள் மேஜிக் ஷோ
    மாயம் இல்லை... மந்திரம் இல்லை!

    மேஜிக்... இந்த 'மந்திரவார்த்தையைக் கேட்டாலே மனசுக்குள் ஓர் இனம் புரியாத சந்தோஷம் பரவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழிகள் விரியக் கண்டு களிக்கும் மந்திர உலகம் அது. அதிலும் ஜாதுகர் மங்கள் மேஜிக் என்றால் குழந்தைகளுக்கு அவ்வளவு குதூகலம்!
    சிறுமியின் தனியான தலை:
    ஒரு பெட்டியில் 12 வயது பெண் குழந்தையை நிற்க வைத்து விட்டு, பின்னர் ஒரு பெட்டியை தலையில் கவிழ்த்து வைத்து, பின்னர் ஒரு கத்தியால் கழுத்தோடு பெயர்த்து எடுத்து, கை உடல் அனைத்தும் அதே நிலையில் இருக்கும் போது, தலையை மட்டும் அடுத்த டேபிளில் எடுத்து வைத்து, அந்த சிறுமியை சிரிக்க வைத்த போது, பார்வையாளர்களிடம் பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்னர், அதே பெட்டியை தலையில் கவிழ்த்து, உடல் உள்ள டேபிள்மேல் வைத்து, தலையில் இருந்த பெட்டியை மட்டும் நீக்கியவுடன் அந்த சிறுமி, எழுந்து கையை அசைத்து வணங்கி விட்டு சென்றபோது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை. இதுபோல பல மேஜிக் சாகசங்களை செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது ஜடுகர் மங்கள் மேஜிக்.
    ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளையும், பெரியவர்களையும் கொண்டாட வைத்து, வியப்படைய வைத்தது என்றால் மிகை இல்லை.
    இந்த மேஜிக் கலை நிகழ்ச்சிகள், மே-18ம் தேதி தொடங்கியது, ஜூன் -10ம் தேதி வரை R.S.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி மற்றும் 7 மணி என்று இரண்டு காட்சிகள் நடைபெறுகிறது.  நுழைவு சீட்டுகள் அரங்கின் நுழைவு வாயிலிலும், www.bookmyshow.com, என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 9884152200.








    A call-to-action text Contact us