தற்கொலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு இலவச ஆலோசனை மையம் கோவையில்
துவக்கம்
பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகளால் மாணவ-மாணவியர்கள் தனிமை, கவலை, மனஅழுத்தம், விரக்தி அடைவதைத் தடுக்க, கோவையில் கோவை சமூக சேவை
அறக்கட்டளை மற்றும் ஹேப்பி மைண்ட்ஸ் ஆலோசனை
மையம் சார்பில் தற்கொலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு
ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் வெளியாகின்றன. மாணவ, மாணவியரும், பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இதில் குறைவான
மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் எதிர்மறை எண்ணம், கவலை, மனஅழுத்தம், மன விரக்தி அடைவதைத் தடுக்க கோவை
சமூக சேவை அறக்கட்டளை முன் முயற்சி எடுத்துள்ளது.
இது குறித்து கோவை சமூக சேவை
அறக்கட்டளை நிர்வாகி திரு. ஈஸ்வரன் கூறியதாவது: எதிர்பார்த்த
மதிப்பெண் பெறாதபோது மாணவ, மாணவியர் இயல்பாகவே தனிமையுணர்வு, மனஅழுத்தம், விரக்தி, குழப்பம் போன்ற சூழலுக்கு தள்ளப்படுவர். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு
ஆலோசனைகள் வழங்கி தைரியப்படுத்த வேண்டியது கட்டாயம். இதற்காக மாணவ, மாணவியருக்கான இலவச
ஆற்றுப்படுத்துதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உடனடி மனநல
ஆலோசனைக்கு 7708663252 என்ற எண்ணை அழைத்து
இலவசமாக ஆலோசனைகளைப்
பெறலாம் என்றார்.