23 வருடங்களாக சைக்கிளை பயன்படுத்தி காவல் பணி செய்யும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய டிஜிபி அவர்கள்
சென்னை பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் புஷ்பராணி சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலனை பேணுதல் போன்ற காரணங்களுக்காக கடந்த 23 வருடங்களாக பணிக்கு சென்று வர சைக்கிளையே பயன்படுத்தி வருகிறார். சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்ப ராணியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் அலுவலகத்திற்கு இன்று (30.1.2023) நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.