• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    திருக்குறள்


    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.

    மு.வ உரை :
    முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

    Translation :
    Labour will produce wealth; idleness will bring poverty.

    Explanation :
    Effort brings fortune's sure increase,
     Its absence brings to nothingness.
    ___
    வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

    “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

    100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

    “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

    வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

    “ஒண்ணுமே ஆகாது சார்”

    ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

    “உங்க கை வலிக்கும் சார்”

    “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

    “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

    “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

    “இல்லை சார். அது வந்து…”

    “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

    “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

    ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

    இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
    படித்ததில் பிடித்தது பயன் படும் என்று நினைத்தால் மற்றவர்களுக்கு அனுப்பவும்.

    www.facebook.com/thekovaitimes


    தமிழகத்தில் முதல்முறையாக நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமானது ‘சிங்காநல்லூர் குளம்’


    பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரி யாக திகழும் கோவை சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் நொய்யல் நீரா தாரத்தை நம்பி ஏராளமான குளங்கள் உள்ளன. அதில் நகரின் எல்லையில் இருப்பது சிங்காநல்லூர் குளம். நகருக்குள் இருந்தாலும் மாசுபாடுகள் குறைந்து, சூழல் பாதுகாப்பில் முன்னிலையில் இருக்கிறது. அதனை மேலும் சிறப்பாக்க மாநகராட்சியும், தன்னார்வலர்கள் குழுக்களும் பல் வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

    கரை ஓரத்தில் மியாவாக்கி மரப் பண்ணை அமைப்பது, பனை விதை கள் நடுவது, பல்லுயிர் சூழலைக் கணக்கிடுவது, குளக்கரையை பலப் படுத்த வெட்டிவேர் நடுவது என ஒவ் வொரு வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்குள்ள சூழலை பாதுகாக்க பெரும் முயற்சி எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று இந்த குளம் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி, நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கல்வெட்டைத் திறந்துவைத்து, குளத்தை நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார்.

    200 மூலிகைச் செடிகள்

    நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மைய நிர்வாகிகள் கூறும்போது, ’16-ம் நூற்றாண்டில் சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் சோழர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப் பட்ட இந்த குளம், நொய்யல் ஆற்றில் இருந்தும், நகரின் இதர நீர்வழித் தடங்களில் இருந்தும் நீரைப் பெறுகிறது. மற்ற எந்த குளங்களிலும் இல்லாத அளவுக்கு இயற்கைச்சூழல், பசுமையான பரப்பு, பல்லுயிர் செழுமை ஆகியவை இந்த நீர்நிலைக்கு நிறைந் துள்ளன. அதன் பிரதிபலிப்பாகவே இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வில், தாவர, பறவை உள்ளிட்ட 720 வகையான பல்லுயிர்கள் நிறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 396 வகை தாவரங்கள், 160 வகையான பறவை கள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக 200 வகையான மூலிகைச் செடிகள், வெளிநாட்டுப் பறவையினங்கள் ஆகியவற்றுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. நகரில் எங்கும் இல்லாத வகையில் நன்னீர் ஆமை அதிகமாக உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்போது இயற்கை சூழலியல் குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும், ஆய்வுக்கு இடமளிக்கும் பகுதியாகவும் இந்த குளம் மாறியுள்ளது. இந்த சூழலை அங்கீகரித்து, மேம்படுத்த ‘நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்றனர். நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதோடு, முன்னாள் குடியரசுத் தலைவர் நினைவாக, குளக்கரையில் ‘கலாம் வனம்’ அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் படகு இல்லத்தை திறந்து சூழல் சுற்றுலாவை செயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்!


    நமக்கு நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவம் பற்றி குறிப்புகள் கொடுத்திருந்தாலும் அவற்றை பின்பற்றி நடப்பதில் பல நடைமுறை சிக்கல் உள்ளதால் இன்றைய காலத்தில் நாம் ஆங்கில மருத்துவத்தையே நாடும் நிலையில் உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை.நாம் உண்ணும் உணவை முறை படியும் நம் ஆரோகியதிற்கு ஏற்ப அவற்றை அளவுடன் எடுத்துக்கொள்ளும் போது நாம் உடல் நிலையை பேணிக்காத்திட முடியும். என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மையும் நம் சந்ததியினரையும் காத்திட நம் முன்னோர்களின் வழியில் இயற்கை மருத்துவத்தை முழுமையாக பயன் படுத்த உதவும் வகையில் சில குறிப்புகள்: 
    *அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
    *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
    *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
    *வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
    *அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
    *சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
    *நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
    *வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
    *தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
    *துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
    *ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
    *கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
    *ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
    *ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
    *ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
    *திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
    *வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
    *நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
    *நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
    *கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
    *வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
    *திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
    *அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
    *துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
    *செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
    *கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
    *சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
    *கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
    *முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
    *கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
    *குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
    *பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
    *முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.


    *லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
    *வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
    *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
    *வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
    *மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
    *சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
    *பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
    *சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
    *ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
    *கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
    *வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
    *வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
    *நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
    *நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
    *கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
    *பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
    *வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
    *சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
    *மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
    *கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.



    இன்றைய மருத்துவ சிந்தனை: முள்ளங்கிக் கீரை:

    உணவிலும் மாற்றம்!!!
    உடலிலும் மாற்றம்!!!!
    சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
    கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் தீர முள்ளங்கிக் கீரைச் சாறு எடுத்து (அரை டம்ளர்) அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள்அனைத்தும் குணமாகும்.
    சிறுநீர் தாராளமாகப் பிரிய முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
    சிறுநீர் கற்கள் கறைய முள்ளங்கிக் கீரைச் சாற்றை (30மில்லி) அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் சிறு நீரகக் கற்கள் கரையும்.
    ஆண்மை , உயிரணுக்கள் அதிகரிக்க முள்ளங்கிக் கீரை சாற்றையும் (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
    முள்ளங்கிக் கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை எனஇருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.


    அடிக்கடி ஏலக்காய் டீயைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பற்றித் தெரியுமா?

    இந்திய சமையலில் உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள் தான் ஏலக்காய். இது மசாலாப் பொருட்களின் ராணியும் கூட. இந்த ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பலரும் விரும்பி குடிப்பார்கள்.
    ஏலக்காயில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி, சி, ரிபோஃப்ளேவின் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது. சரி, இப்போது ஏலக்காய் டீயைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.
    புற்றுநோய் ஏலக்காய் டீயைக் குடித்தால், ஏலக்காயில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, உடலை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
    உயர் இரத்த அழுத்தம்
    உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா? அதை இயற்கை வழியில் கட்டுப்படுத்த வேண்டுமா? அப்படியெனில் ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் நுரையீரலில் இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, உயர் இரத்த அழுத்தமும் குறையும்.
    தலைவலி
    தலைவலி அடிக்கடி வருகிறதா? அப்படியெனில் தலை வலிக்கும் போது ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் விரைவில் தலைவலி மறையும்.
    செரிமான பிரச்சனைகள்
    செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் அஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவை நீங்கும்.
    இதய பிரச்சனைகள்
    இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு, ஏலக்காய் டீ மிகவும் நல்லது. அதிலும் தினமும் ஏலக்காய் டீயைக் குடித்து வந்தால், இதய நோய்களில் இருந்து விடுபடலாம்.
    நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் ஏலக்காய் டீ, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். வேண்டுமானால், தினமும் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள்


    A call-to-action text Contact us